பிரபல திரைப்பட நடிகை ஸ்ரீதேவியின் மரணச் செய்தி வெளியானதிலிருந்து உலகம் முழுவதிலும் இருந்து இரங்கல் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. துபாயிலுள்ள ஆர்.ஏ.கே. வால்டார்ப் ஆஸ்டோரியா நட்சத்திர ஹோட்டலில் உறவினர் மோஹித் மார்வா திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்ற ஸ்ரீதேவிக்கு துபாய் நேரப்படி நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு மாண்டதாக அவ ரது குடும்பத்தினர் தெரிவித்தனர். திருமண நிகழ்ச்சிக்குப் பின்னர் 'எமிரேட்ஸ் டவர்ஸ்' ஹோட்டலிலுள்ள குளியலறையில் ஸ்ரீதேவி, 54, மயங்கி விழுந்ததால் அவரது உயிர் பிரிந்ததாக துபாய் ஊடகங்கள் செய்தி வெளி யிட்டுள்ளன.
மரணமுற்ற ஸ்ரீதேவியின் உடல் நேற்றுக் காலை துபாய் காவல்துறை தலைமையகத்துக்குக் கொண்டு செல் லப்பட்டது. அவரது உடல் துபாய் அரசு மருத்துவமனையில் பிரேத பரி சோதனைக்குப் பின் 'எம்பாமிங்' செய் யப்படும் என்று இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிட்டன. அவரது உடலைக் கொண்டு வருவதற்காக தனி விமானம் ஒன்று துபாய்க்கு அனுப்பப்பட்டு உள்ளது. அவ்விமானம் மூலம் இந்திய நேரப்படி நேற்றிரவு 8 மணிக்கு உடல் மும்பை வந்து சேரும் என்றும் அவை கூறின.
இதற்கிடையே, மும்பையின் லோகண்ட்வாலா என்னும் பகுதியில் உள்ள ஸ்ரீதேவியின் இல்லத்தின் முன் நூற்றுக்கணக்கானோர் திரண்டு தங் களது துக்கத்தையும் சோகத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர். அசம்பா விதம் ஏதும் நடைபெற்றுவிடக் கூடாது என்பதற்காக அந்த வீட்டின் முன் இரண்டு போலிஸ் வாகனங்கள் நிறுத் தப்பட்டுள்ளன. நிலைமையை போலி சார் கண்காணித்து வருகின்றனர். ஸ்ரீதேவியின் திடீர் மரணத்தால் ஒட்டுமொத்த இந்திய திரைப்பட உலகமே சோகத்தில் மூழ்கி உள்ளது. மும்பையில் உள்ள அமெரிக்க துணை தூதரக அலுவலகமும் ஸ்ரீதேவி மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தது.
ஸ்ரீதேவியின் உயிர் பிரிவதற்கு சிறிது நேரத்திற்கு முன்னால் எடுக்கப்பட்ட படம். மணமக்கள், தமது கணவர் போனி கபூர், இளைய மகள் குஷி கபூர் (இடக்கோடி) ஆகியோருடன் சிரித்த முகமாக ஸ்ரீதேவி. படம்: இந்திய ஊடகம்

