ராஜ்கமல்: முத்தக்காட்சி கேட்டது உண்மைதான்

ராஜ்கமல்: முத்தக்காட்சி கேட்டது உண்மைதான்

1 mins read
f02ba147-983b-4ac7-b989-00dcdde17d13
-

'மேல்நாட்டு மருமகன்' படத்துக்கு கிடைக்கும் பாராட்டுகளால் உச்சி குளிர்ந்து போயிருக்கிறார் அதன் நாயகன் ராஜ்கமல். ஏற்கெனவே 'சண்டிக்குதிரை' படத்திலும் இவர் நாயகனாக நடித்திருக்கிறார். தொலைக் காட்சித் தொடர்களில் லயித்திருப்பவர்களுக்கு ராஜ்கமலின் முகம் மிகவும் பரிச்சயமான ஒன்று. இவரது குடும்பத்துக்கும் கலைத்துறைக்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. ராஜ்கமலின் தந்தை கணேஷ், நடிகர் ஜெய்சங்கரின் ரசிகர் மன்றத் தலைவராம். ஒரு வகையில் தன்னை ஜெய்சங்கர் வீட்டுப் பிள்ளை என்று கூட சொல்லலாம் என்கிறார்.

'மேல்நாட்டு மருமகன்' படத் தில் முத்தக்காட்சி வேண்டும் என்று அடம்பிடித்தீர்களாமே? "அதெல்லாம் தவறான தகவல். முத்தம் கேட்டு பிடிவாதம் பிடிக்க வில்லை. ஆனால், கேட்டது என் னவோ உண்மைதான். "கதைப்படி கதாநாயகி வெளி நாட்டைச் சேர்ந்தவர். மேற்கத்திய கலாச்சாரத்தில் முத்தம் என்பது நட்பு, உறவுகளுக்கு அடிப்படை. அன்பை வெளிப்படுத்த அவர்கள் முத்தம்தான் பரிமாறிக் கொள்வார் கள். "எங்கள் படத்தில் ஒரு முத்தக் காட்சிகூட இல்லையென்றதும் என் கருத்தை சொன்னேன். இயக் குநரும் ஏற்றுக்கொண்டு அந்தக் காட்சியை படமாக்கினார். துரதி ருஷ்டவசமாக தணிக்கைக் குழு வினர் ஈவு இரக்கமின்றி அந்தக் காட்சியை வெட்டிவிட்டார்கள். அதனால் வருத்தமாக உள்ளது," என்று சோகத்துடன் சொல்கிறார் ராஜ்கமல்.

'மேல்நாட்டு மருமகன்' படத்தில் ராஜ்கமல், ஆண்ட்ரியன்.