திரையரங்க உரிமையாளராக விமல் நடிக்கும் படம் 'கன்னி ராசி'. அவரது ஜோடியாக வரலட்சுமி நடிக்கிறார். பழைய வெற்றிப்படத் தலைப்பு களை மீண்டும் வைப்பதுதான் கோடம்பாக்கத்தின் தற்போதைய வழக்கமாக உள்ளது. முப்ப தாண்டுகளுக்கு முன்பு ஆர்.பாண்டியராஜன் இயக்குநராக அறிமுகமாகி இதே பெயரில் இயக்கிய படம் பெரும் வெற்றி பெற்றது. அதன் அடிப்படையில் மீண் டும் 'கன்னிராசி' உருவாகிறது. எஸ்.முத்துக்குமரன் இயக்குகி றார். நகைச்சுவை, காதல் விளையாட்டுகளுடன் முந்தைய படத்துக்குப் பெருமை சேர்க்கும் இப்படம் என்று இயக்குநர் நம்பிக்கையோடு சொல்கிறார். "நாயகன் விமல் குடும்பத்தில் அத்தனை பேருக்கும் கன்னிராசி. அனைவரும் காதல் திருமணம் செய்தவர்கள். கன்னிராசியாக இருந்தாலும் காதல் திருமணம் செய்வதில்லை என்கிற கண்டிப் புடன் இருக்கும் விமல், எப்படி காதல் வலையில் விழுந்தார் என்பதை நகைச்சுவை கலந்து சொல்கிறது படம்.
'கன்னிராசி' படத்தின் ஒரு காட்சியில் விமல், வரலட்சுமி.

