மணல் சிற்பம் மூலம் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி

மணல் சிற்பம் மூலம் நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி

1 mins read
d1ec1ead-c3a3-4f43-b704-d53f7a7eee17
-
Google News Preferred Icon

துபாயில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் குடும்பத்தாருக்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் ஸ்ரீதேவியின் மணல் சிற்பத்தை அமைத்துள்ளார். அச்சிற்பத்துக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். தேசிய அளவில் தலைசிறந்த மணல் சிற்பக் கலைஞராகத் திகழ்பவர் சுதர்சன் பட்நாயக். பல்வேறு நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளார். மகிழ்ச்சியான சம்பவங்கள் மற்றும் துக்க நிகழ்வுகளை பூரி கடற்கரையில் மணல் சிற்பங்களாகச் செதுக்கி மக்கள் மனதில் பதியவைத்து வருகிறார் சுதர்சன். இந்நிலையில் ஸ்ரீதேவியின் மணல் சிற்பம் அச்சு அசலாக அவரைப் போலவே உள்ளது என அதை நேரில் பார்த்த பலரும் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.