சிம்பு: தொல்லை தருகிறார்கள்

சிம்பு: தொல்லை தருகிறார்கள்

1 mins read
a0f0921b-0ec3-4f35-8779-ff9c6c92619d
-

தன்னை வைத்து படம் எடுக்க வேண்டாம் என்று படத் தயாரிப்பாளருக்கு குறிப்பிட்ட ஒரு தரப் பினர் இடையூறுகளை ஏற்படுத்துவதாக நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் சங்க நிர்வாகிகள் பொன்வண்ணன் மற்றும் கருணாஸ் ஆகியோரி டம் பேசி தனது தரப்பு நியாயங்களை விளக்கி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். சிம்பு நடிப்பில் கடைசியாக வெளியான 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படுதோல்வியைச் சந்தித்ததாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவித்தன. அப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநரும் தோல்விக்குக் காரணம் சிம்புதான் என பகிரங்கமாக சாடினார். இதுகுறித்து சிம்புவும் விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், சிம்பு தற்போது மணிரத்னம் இயக்கத்தில் `செக்கச் சிவந்த வானம்' என்ற படத்துக்காக ஒப்பந்தமாகி உள்ளார். ஆனால் இதில் தன்னை நடிக்கவிடாமல் தயாரிப்பாளர் சங்கம் தடுப்பதாக சிம்பு குற்றம்சாட்டியுள்ளார். "நான் நடித்த ஒரு திரைப்படம் வெளியாகி ஆறு மாதங்களுக்குப் பிறகு என் மீது குற்றம் சுமத்துகிறார்கள். யாருடைய தூண்டுதலின் பேரில் இப்படிச் செய்தார்கள் என்று தெரியவில்லை.