'சரவணன் மீனாட்சி' தொலைக்காட்சித் தொடர் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் மனதைக் கவர்ந்தவர் கவின். தற்போது கோடம்பாக்கத்தின் வெளிச்சம் இவர் மீதும் படர்ந்துள்ளது. கவின் நாயகனாக நடிக்கும் 'நட்புனா என்னானு தெரியுமா' வேகமாக வளர்ந்து வருகிறது. இதில் இவருக்கு ஜோடியாக நடிப்பவர் ரம்யா நம்பீசன். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் சிவகுமார். "ரஜினி நடித்த 'தளபதி' படத்தில் வந்த ஒரு வசனத்தை தலைப்பாக வைத்ததில் எங்களுக்கு மகிழ்ச்சி. அப்படத்தைப் போலவே இப்படமும் வெற்றி பெறும் என நம்புகிறோம். இதில் அருண்ராஜா காமராஜ், ராஜு இருவரும் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர்," என்கிறார் சிவகுமார்.
கவினுடன் இணைந்து நடிக்கும் ரம்யா நம்பீசன்
1 mins read
-

