'மன நிறைவே முக்கியம்'

'மன நிறைவே முக்கியம்'

1 mins read
21a060c2-e3dc-4be8-bb8f-a74d7a9da023
-

மனநிறைவு தரும் கதாபாத்திரங்களில் நடிப்பதற்காக சில வாய்ப்புகளை கைகழுவுவதில் தவறேதும் இல்லை என்கிறார் நடிகை பிரியா ஆனந்த். தற்போது மலையாளத்தில் நிவின் பாலியுடன் இணைந்து 'காயங்குளம் கொச்சுன்னி' படத்தில் நாயகியாக நடித்து வருபவர், மலையாளத் திரையுலகில் இது போன்று ஏராளமான நல்ல படைப்புகள் உருவாகி வருவதாக பாராட்டு தெரிவித்துள்ளார். ரோஷன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த பீரியட் படத்தில் நடித்ததன் மூலம் தனது கனவு நிறைவேறி இருப்பதாகக் கூறுகிறார் பிரியா.

"இந்தியத் திரையுலகின் மிகத் திறமை வாய்ந்த கலைஞர்கள் இந்தப் படத்தில் பங்கேற்றுள்ளனர். இது போன்ற படங்களில் நடிப்பது எனக்கு அளவிட இயலாத மகிழ்ச்சியை, உற்சாகத்தைத் தருகிறது. "இது கடந்த காலத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை என்பதால் ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் தீவிரமாக ஆய்வு செய் துள்ளனர். ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு கால உழைப்பின் வெளிப்பாடாக இப்படத்தின் திரைக்கதை உருவாகி உள்ளது. "மலையாள சினிமாவைப் பொறுத்தவரையில் ஒரு கதாபாத்திரத்தை எந்தளவு யதார்த்தமாகவும் இயல்பாகவும் அமைக்க முடியுமோ, அந்தளவுக்கு அதைச் செய்துகாட்டுவர். எனவேதான் பெரும்பாலான மலையாளப் படங்களைப் பார்க்கும் ரசிகர்கள், அவற்றில் இடம்பெறும் கதாபாத்திரங்களுடன் தங்களை ஒப்பிட்டுப் பார்த்துக்கொள்ள முடிகிறது.

"இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது எனக்கான சிறப்பு வசதிகள் கொண்ட வாகனத்தில் இருந்து இறங்கிய அடுத்த நிமிடமே நான் ஏற்றுக் கொண்ட கதாபாத்திரமாக மாறிவிடுவேன். காரணம் அந்த அளவுக்கு அந்த பாத்திரம் என்னை ஆக்கிரமித்துள்ளது," என்றார் பிரியா ஆனந்த்.