ஜீப் பயணத்தின்போது உருவாகும் காதல்

ஜீப் பயணத்தின்போது உருவாகும் காதல்

1 mins read
f53a2c98-105e-4d3e-9dc5-78949e137049
-

அருண்காந்த் இயக்கத்தில் உரு வாகி வரும் புதிய படம் 'கோ கோ மாக்கோ'. இவர் ஏற்கெனவே 'இந்த நிலைமாறும்' என்ற படத்தை இயக்கிய அனுபவம் உள்ளவர். அந்தப் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந் நிலையில் அடுத்த படைப்பை உருவாக்குவதில் மும்முரமாகி விட்டாராம். "எனது முதல் படத்தில் நாயகனாக நடித்த ராம்குமாரையே இதிலும் கதாநாயகனாக நடிக்க வைத்துள்ளேன். ஜீப் பயணத்தின் போது ஏற்படும் காதலை திகில், விளையாட்டுத்தனம் கலந்து வித்தியாசமான கோணத்தில் கொடுக்க இருக்கிறோம்.

"இது தமிழ் சினிமாவில் இதுவரை பார்க்காத கதையம்சம் கொண்ட படம். முழுவதும் கடற் கரைப் பகுதியில் படமாகிறது," என்கிறார் அருண்காந்த். இது ரசிகர்களின் பார்வையில் குறைந்த செலவில் மிக நேர்த்தி யாக எடுக்கப்பட்ட பிரம்மாண்ட மான படமாக இருக்கும் என்று குறிப்பிடுபவர், இதற்காகப் புதிய தொழில்நுட்பங்களைப் பயன் படுத்த உள்ளதாகக் கூறுகிறார். சரி.. இதென்ன வித்தியாச மான தலைப்பாக உள்ளதே? "உண்மைதான். 'கோ கோ மாக்கோ' என்பது ஓர் இசைத் தொகுப்பின் பெயர். இதில் நடிக்கும் ராம்குமார் வேறு யாருமல்ல, நடிகர் சரத்குமாரின் அண்ணன் மகன். இவருடைய ஜோடியாக புதுமுகம் தனுஷா நடிக்கிறார்," என்கிறார் இயக்குநர் அருண்குமார்.