சாய் பல்லவி: தாயாக நடித்ததில் மகிழ்ச்சி

சாய் பல்லவி: தாயாக நடித்ததில் மகிழ்ச்சி

1 mins read
566087e6-c978-47f7-9c1f-1067e131608a
-
Google News Preferred Icon

ஒரு குழந்தைக்கு தாயாக நடித்தது மறக்க இயலாத அனுபவம் என்கிறார் இளம் நாயகி சாய் பல்லவி. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள 'கரு'வில் நடித்துள்ள இவருக்கு நிச்சயம் விருதுகள் குவி யும் என்று கோடம்பாக்கத்து விவரப் புள்ளிகள் தெரிவிக் கின்றனர். அந்தளவு சாய் பல்லவி மிக கச்சிதமான, உணர்வுபூர்வமான நடிப்பை வழங்கியுள்ளதாகத் தகவல். 'கரு' படத்தில் நடித்த அனுபவம் குறித்து கேட்டால், மளமளவென தகவல்களைக் கொட்டுகிறார் அம்மணி. இயக்குநர் விஜய்யை அடிக்கடி புகழ்ந்து தள்ளுகிறார்.

"படம் குறித்து அதிகம் பேச முடியாது. அதற்கு எனக்கு அனுமதி இல்லை. இது ஒரு தாய்க்கும் மகளுக்கும் இடையேயான உணர்வுபூர்வமான விஷயங்களை விவரிக்கும் அழகான கதை. இதை என்னிடம் விஜய் சார் விவரித்த போதே மனதைக் கவர்ந்தது. தாய் கதாபாத்திரத்துக்கென சில உணர்வுகளைச் சிறப்பாக வெளிப்படுத்த வேண்டும் என்றார் அவர். "இப்படியொரு கதாபாத்திரத்தை ஏற்று அதில் வெற்றிபெற முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. இது எனக்கு முற்றிலும் புதுமையான ஓர் அனுபவம். ஆனால் இயக்குநர் தைரியமூட்டினார்.

"இதையடுத்து என் மகளாக நடித்த வெரோனிகாவுடன் சில நாட்கள் நன்கு பேசிப் பழகுமாறு அறிவுறுத்தினார். நானும் வெரோனிக்காவும் அதன்படி நடந்துகொண்டோம். அவளை என் குழந்தையாகவே பார்க்கத் தொடங்கினேன். அவளை அனைத்து வகையிலும் பாதுகாக்க வேண்டும் என மனதார விரும்பினேன். எனது இந்த எண்ணமும் செயல்பாடும் இருவருக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தியது. மேலும் எனது கதாபாத்திரத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தியது," என்றார்.