ஓய்வுபெறும் நாளில் அதிரடி நடவடிக்கை

ஓய்வுபெறும் நாளில் அதிரடி நடவடிக்கை

1 mins read
b15f5eb8-8d39-4ae5-9074-1d688e25ca93
-
Google News Preferred Icon

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரியாகப் பொறுப்பேற்றிருந்த காவல்துறை துணை கண்காணிப் பாளர் பாண்டியன் திடீரென பணி யிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். பணி ஓய்வு பெறும் நாளில் அவர் மீது காவல்துறை தலைவர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் கருணாநிதியின் தனி பாதுகாப்பு அதிகாரிகளாக பாண்டியன் உட்பட மூவர் நியமிக்கப்பட்டனர்.

கடந்த 2006 முதல் பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றி வரும் இம்மூவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டில் 4800 சதுர அடி உள்ள மனை அரசால் ஒதுக்கப்பட்டது. இந்த மனைகள் ஒவ்வொன்றும் வீட்டு வசதி வாரிய விலையின் படி அப்போதே ரூ.75 லட்சம் ஆகும். எனினும் மாதச்சம்பளம் ரூ.15,000 வரை மட்டுமே உள்ள நிலையில், மூவரும் இத்தொகையை ஒரே தவணையில் செலுத்தி யிருந்தனர். இது பல்வேறு கேள் விகளையும் சந்தேகங்களையும் எழுப்புவதாகக் கூறி, சமூக ஆர் வலர் செல்வராஜ் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். மூவரும் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள் ளனர் என்பதே அவரது புகாராகும். 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் லஞ்ச ஒழிப்புத்துறை இந்தப் புகாரின் பேரில் 2012ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு இன்றும் நிலுவையில் உள்ள நிலையில், துணை கண்காணிப்பாளர் பாண்டி யன் நேற்றுடன் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியுடன் பாண்டியன். படம்: இணையம்