நிஜத்திலும் நடித்தார் ஸ்ரீதேவி : இயக்குநர் ராம்கோபால்

நிஜத்திலும் நடித்தார் ஸ்ரீதேவி : இயக்குநர் ராம்கோபால்

2 mins read
2d7dc9d3-d3f5-4ca0-9c9b-5ea3f8974db5
-

சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிக்க இந்தி இயக்குநர் ராம்கோபால் வர்மா தயங்கியதே இல்லை. தனது கருத்து தவறானது எனில், அதற்காக மன்னிப்புக் கோருவதில் இருந்தும் பின்வாங்கமாட்டார். இவர் இயக்கிய முதல் படத்தின் கதாநாயகி ஸ்ரீதேவி. அவரது தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருந்தது, அவரது மறைவிற்கு என்ன காரணம் என்பது குறித்து ஒரு கட்டுரையை வெளி யிட்டுள்ளார் ராம்கோபால் வர்மா. அதில் ஸ்ரீதேவியின் மரணச் செய்தியைக் கேட்டு அதிர்ந்து போனதாகவும் ஆழ்ந்த துக்கத் திற்குள்ளானதாகவும் குறிப்பிட்டுள்ளார். "ஒருவரது வாழ்க்கை வெளியிலிருந்து பார்க்க பொறாமைப்படக் கூடியதாகவும் ஆசைக்குரியதாக வும் தெரியலாம். ஆனால், அதன் மறுமுகம் வேதனையின் வடிவமாகவேகூட இருக்கலாம்.

இதற்கு ஸ்ரீதேவியின் வாழ்க்கை ஓர் எடுத்துக் காட்டு," என்று தெரிவித்துள்ளார் ராம்கோபால். ஸ்ரீதேவியை, 'ஒரு பெண்ணின் உடலுக்குள் அடைபட்ட குழந்தை' என வர்ணித்துள்ள அவர், வெகுளியான ஸ்ரீதேவி தனக்குச் சிறு வயதிலிருந்து ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் எதிலும் சிறு சந்தேகத்துடனேயே காணப்படுவார் எனக் குறிப்பிட்டுள்ளார். இது அவ்வளவு ஆரோக்கியமான விஷயம் கிடையாது என்றும் ஆழ்மனதில் ஓடிக்கொண்டி ருக்கும் விஷயங்களால் அவர் கண்களில் ஏதோ ஒரு வலி இருப்பதை தாம் பார்த்திருப்பதாகவும் ராம்கோபால் தெரிவித்துள்ளார். மாரடைப்பால் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்திருக்கிறார் எனக் கூறினாலும் அவரது மருந்துண்ணும் பழக்க வழக்கங்களும் அவரது இறப்பில் பெரும் பங்கு வகித்திருக்கும் என்பது ராம்கோபாலின் கணிப்பு. "பெரும்பாலும் தான் எப்படித் தெரிகிறோம் என்ற கவலையே அவரை ஆட்டிப்படைக்கத் தொடங்கியது.

அவர் ஓர் அழகி யாகவே பார்க்கப்பட்டு வந்தார். எல்லாக் கதாநாயகிகளுக்கும் ஏற்படும் மூப்பு இவரைச் சற்றே பாதித்தது. "தனது மனதில் ஓடு கின்ற யாவும் யாருக்கும் தெ ரி ந் து வி ட க் கூ டா து என்பதற்காகத் தன்னைச் சுற்றி மனரீதியாக ஒரு வேலியை அமைத்துக் கொண்டார். இப்படி ஒருவித இறுக்கத் துடனேயே இருந்தது அவரது குற்றமல்ல. அவர் நிஜ வாழ்விலும் நடிக்க அனுமதிக்கப் பட்டதாகவே கருது கிறேன்," என்கிறார் ராம்கோபால் வர்மா.