விஜய் சேதுபதியின் பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

விஜய் சேதுபதியின் பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்

1 mins read
dacfd59d-24a9-4fb1-924b-67be85278484
-

ஒரு வழியாக விஜய் சேதுபதியையும் பாடகர் ஆக்கிவிட்டனர். 'பேய் பசி' படத்திற்காக யுவன்சங்கர் ராஜா இசையில் ஒரு பாடலைப் பாடியுள்ளார் இவர். ரெட் ஈஸ்ட் கிரியே ஷன் ஸ்ரீநிதி ராஜாராம் தயாரிக்கும் படம் 'பேய் பசி'. ஒரு பேரங்காடியில் திகிலான சம்பவங்கள் நடக்கின்றன. அவற்றை மையப்படுத்தி உருவாகியுள்ளது இப்படம். ஸ்ரீநிவாஸ் கவிநயம் இயக்கியுள்ளார். படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதில் ஹரி கிருஷ்ணா பாஸ்கர் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக அம்ரிதா நடிக்கிறார். இவர்களோடு விபின், புதுமுகம் நமீதா, டேனியல், பகவதி பெருமாள், கருணாகரன் உட்பட பலர் நடிக்கிறார்கள். இந்நிலையில் யுவன்சங்கர் ராஜா இசையில் முதல் முறையாக விஜய் சேதுபதி பாட்டுப் பாடி இருக்கிறார். இப்பாடல் சிறந்த பாடலாக உருவாகி இருக்கிறது என்கிறார் யுவன். விஜய் சேதுபதியின் ரசிகர்கள் இந்தப் பாடல் வெளியீட்டிற்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.