இன்றைய சூழலில் காவல்துறையில் பெண் காவலர்கள் எதிர்கொள்ளும் அத்தனை பிரச்சினைகளையும் தைரியமாகப் பேசும் படமாக உருவாகியுள்ளது 'மிக மிக அவசரம்'. 'அமைதிப்படை 2', 'கங்காரு' என இரண்டு படங்களைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி இப்படத்தின்மூலம் இயக்குநராக அவதாரமெடுத்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் பிரியங்கா பெண் காவலராக நடிக்க, 'வழக்கு எண்' முத்துராமன், 'லிங்கா' அரவிந்த், ராமதாஸ், சரவண சக்தி, வெற்றிக்குமரன், குணா, வி.கே.சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். மேலும், இதில் சீமான் காவல்துறை உயரதிகாரியாக நடித்துள்ளார்.
எப்போதுமே நல்ல படங்களை எடுத்து, அப்படங்களை லாப நஷ்டம் பார்க்காமல் மக்கள் மத்தியில் கொண்டுபோய்ச் சேர்ப்பதில் கைதேர்ந்தவரான இயக்குநர் வெற்றிமாறன் இப்படத்தை தனது 'கிராஸ் ரூட் பிலிம்' நிறுவனம் மூலம் உலகம் முழுக்க வெளியிடும் உரிமையைப் பெற்றுள்ளாராம். இதையடுத்து இதன் முன்னோட்டம் மார்ச் 19ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது.

