'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி'

'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி'

1 mins read
d4995ecf-f70b-4027-a225-86645d30e3c8
-

இம்சை அரசன் வடிவேலுவை இப்போது புதிய பிரச்சினை ஒன்று தொற்றிக்கொண்டு இம்சைப் படுத்தி வருகிறது. 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' படத்தில் முன்னதாக ஒப்பந்தம் செய்தபடி நடிப்பதற்கு வடிவேலு மறுப்பு தெரி விப்பதால் அவர் ரூ.9 கோடியை வட்டியுடன் அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் கெடு விதித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.9 கோடி அபராதம் என்று கேள்விப்பட்டவுடனே ஆடிப்போன வடிவேலு, தற்போது நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்றும் தயாரிப்பாளர் சங்க வட்டாரம் தெரிவித்துள்ளது.

'இம்சை அரசன் 24ஆம் புலி கேசி' படத்தில் வடிவேலு பிரச் சினை செய்வதாக தயாரிப்பாளர் ஷங்கர் புகார் அளித்திருக்கும் நிலையில், வடிவேலு படப்பிடிப்பில் கலந்துகொள்ளாவிட்டால் ரூ.9 கோடி அபராதம் செலுத்தவேண்டும் என்று சங்கம் கெடு விதித்தது. ஷங்கர் தயாரிப்பில் வடிவேலு கதாநாயகனாக நடித்த 'இம்சை அரசன் 23ஆம் புலிகேசி' படம் கடந்த 2006ஆம் ஆண்டு வெளி யாகி வெற்றிகரமாக ஓடியது. சிம்புதேவன் இயக்கி இருந்தார். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை 'இம்சை அரசன் 24ஆம் புலிகேசி' என்ற பெயரில் தயாரிக்க ஷங்கர் திட்டமிட்டு அதில் நடிக்க வடிவேலுவை ரூ.1.50 கோடி சம்பள முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் செய்தார்.