அண்மையில் புதுச்சேரியில் கண் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் அமலா பால். அப்போது தனது கண்களைத் தானமாக வழங்குவதாக அறிவித்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், பார்த்திபன், சீதா, திரிஷா, மீனா, சினேகா, லைலா உள்பட பலரும் உடல் தானம், கண் தானம் செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளனர். அந்த வரிசையில் இப்போது அமலா பால் சேர்ந்துள்ளார். அவர் கூறுகையில் "உலகிலேயே இந்தியாவில்தான் கண் பார்வை இல்லாதவர்கள் அதிகம் உள்ளனர். இதற்கு காரணம், கண் தானம் பற்றிய விழிப்புணர்வு இல்லாததுதான். இனியாவது மக்களிடம் இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த அனைவரும் முன்வரவேண்டும்," என்றார். விவாகரத்துக்குப் பிறகு தமிழ், மலையாளப் படங்களில் நடித்துவரும் அமலா பால், 'ஆடுஜீவிதம்' என்ற மலையாளப் படத்தில் பிருத்திவிராஜ் ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று கேரளாவில் தொடங்கியது.
கண் தானம் செய்த அமலா பால்
1 mins read
-

