லண்டன் தெருவில் பிறந்தநாள் கொண்டாடிய டாப்ஸி

லண்டன் தெருவில் பிறந்தநாள் கொண்டாடிய டாப்ஸி

1 mins read
6e5ab5b6-ae22-4eec-b93d-194b38750748
-

அண்மையில் படப்பிடிப்பிற்காக லண்டன் சென்றிருந்த டாப்ஸி அங்கிருந்த தெருக்களில் அமர்க் களமாக பிறந்தநாளைக் கொண்டாடி னார். இதுபற்றி அவர் கூறுகையில், "இந்தி படத்தில் நடிப்பதற்காக லண்டன் சென்றிருந்தேன். அங்குள்ள தெருவில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அன்றைய தினம் எனக்குப் பிறந்தநாள். வேலை மும்முரத்தில் மறந்துவிட்டேன். ஆனால் படக்குழுவினர் எனது பிறந்தநாளை ஞாபகம் வைத்திருந்து என்னிடம் தெரிவித்தனர். அதையடுத்துப் பிறந்த நாள் கொண்டாட்டமாக ஏதாவது செய்யவேண்டும் என்று பேசினோம்.

அந்தக் கொண்டாட்டம் ஓர் இடத்தில் மட்டும் நின்றுவிடாமல் லண்டனில் பல இடங்களில் நடத்தவேண்டும் என்று முடிவானது. அன்று இரவு 'ரிக் ஷா'வை வாடகைக்கு எடுத்துக் கொண்டு அதில் ஏறி கூச்சல் போட்டபடி சிரித்துக் கொண்டும் கிண்டலடித்த படியும் ஊரைச் சுற்றினோம். "எதற்காக இப்படி செய்தோம் என்பதை அறிந்தவுடன் அங்கிருந் தவர்கள் எனக்குப் பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்தனர். இந்த வருடம் எனக்கு மறக்கமுடியாத பிறந்தநாளாக அமைந்தது," என்றார் டாப்ஸி.