முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரேயா சரண். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட தென்னிந்திய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் 35 வயதைத் தொட்டுவிட்டதாலும் இவருக்கு முகத்தில் முதிர்ச்சி தெரியத் துவங்கிவிட்டாதாலும் திரைப் படங்களில் வாய்ப்புக்கொடுக்க இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் தயங்கியதாக தகவல் வெளியானது. அதனால் ஸ்ரேயாவுக்குத் தற்போது படங்களில் நடிக்க எந்த வாய்ப்புகளும் இல்லாததால் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
இவரைத் திருமணம் செய்து கொள்ளப்போவது பிரபல ரஷ்ய கூடைப்பந்து விளையாட்டு வீரர் ஆண்ட்ரி கோஷ்சேவ். இவர்களுடைய திருமணம் இந்த மாதம் 17, 18, 19 ஆகிய தேதிகளில் உதயபூரில் பிரம்மாண்டமாக நடைப் பெற இருப்பதாகக் கூறப்படுகிறது. தற்பொழுது ஸ்ரேயாவுக்கு 35 வயதாகிறது. ஆனால் அவரது வருங்கால கணவராகப்போகும் ஆண்ட்ரிக்கு 25 வயதுதான் ஆகிறது என்றொரு செய்தி வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது. அது உண்மை யென்றால், தன்னை விட 10 வயது குறைவானவரை திருமணம் செய்து கொள்ளப்போகிறார் ஸ்ரேயா சரண்.

