நடிகைகள் என்றால் சுகங்களை அனுபவிக்கிறவர்கள் என்ற தவறான எண்ணம் பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது. ஆனால் நடிகைகளின் வாழ்க்கையில் மகிழ்ச்சியே இல்லை என்று நடிகை தமன்னா மனம் வெறுத்துக் கூறியுள்ளார்.
அண்மையில் நடிகை ஸ்ரீதேவி இறப்பு திரைத்துறையினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஸ்ரீதேவியை வெளியே பார்க்கும்போது மகிழ்ச்சியான ஒரு மனைவியாக, தாயாக, நடிகையாகக் காட்சியளித்தார். ஆனால் அவர் உண்மையில் மகிழ்ச்சியாக வாழவில்லை. நிஜ வாழ்க்கையிலும் நடித்துக்கொண்டுதான் இருந்தார் என்று பலரும் பல விதமாகக் கூறி வரும் வேளையில் தமன்னாவும் நடிகைகளின் வாழ்க்கையைக் குறித்து மனம் திறந்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் அளித்துள்ள நேர்முகக்காணலில், "நடிகைகள் என்றால் சுகங்களை அனுபவிக்கிறவர்கள் என்ற தவறான எண்ணம் பொதுமக்கள் மத்தியில் இருக்கிறது. "நாங்களும் நெருக்கடியில் வாழ்கிறோம் என்பது அவர்களுக்குத் தெரிவது இல்லை. நடிகைகள் யாரும் இங்கு முழுமையான மகிழ்ச்சியில் இல்லை. இரவு பகல் பாராமல் படப்பிடிப்புகளில் கலந்து கொள்கிறோம். ஒரு நிமிடம் கூட ஓய்வில்லாமல் உழைக்கிறோம். "படிப்பிடிப்பில் 'ஷாட் ரெடி' என்று அழைத்ததும் போய் நிற்கவேண்டும். மனதில் என்ன கஷ்ட நஷ்டம் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக்கொள்ளாமல் நடிக்க வேண்டும்.

