'ரசிகர்கள் ஊக்குவிக்க வேண்டும்'

1 mins read
08ef01fc-f538-4dee-93bc-70a0b05e2ca2
-

தங்களுக்குப் பிடித்தமான திரைக் கலைஞர்களின் மனம் நோகாதபடி ரசிகர்கள் நடந்துகொள்ள வேண்டும் என்கிறார் நடிகை ஓவியா. பிரபலங்கள் என்றாலும், திரைக் கலைஞர்களும் மனிதர்களே என்று அவர் தெரிவித்துள்ளார். "விமர்சனங்களையும் கிண்டல்களை யும் நான் பெரிதுபடுத்துவதில்லை. அதே சமயம் எல்லோருமே என்னைப் போல் எல்லாவற்றையும் சகஜமாக எடுத்துக் கொள்வார்கள் என்று சொல்ல இயலாது. "திரைக் கலைஞர்களை ரசிகர்கள் ஊக்குவிக்க வேண்டும். மாறாக அவர் களது உணர்வுகளைக் காயப்படுத்தக் கூடாது. பிரபலமாக இருப்பது இன்றைய நிலையில் அவ்வளவு சுலபமல்ல. கடும் மன அழுத்தத்துக்கு ஆளாக வேண்டியிருக்கும். ஏனெனில் எந்நேரமும் உங்களை யாரேனும் கவனித்தபடியே உள்ளனர். என்னைப் பொறுத்தவரை இயல்பான ஒரு வாழ்க்கையையே விரும்புகிறேன்," என்கிறார் ஓவியா.