சமூகத்துக்கு தேவையான நல்ல கருத்துகளுடன் உருவாகியுள்ளது 'செயல்'. ரவி அப்புலு இயக்கியுள்ளார். வட சென்னைதான் கதைக்களமாம். "கதாநாயகனை உள்ளூர் ரவுடி ஒருவன் சரமாரியாகத் தாக்குகிறான். இந்தச் சம்பவம் இருவரது வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதையடுத்து நாயகன் ஒரு செயலை செய்ய விரும்புகிறார். அது என்ன என்பதே கதை," என்கிறார் இயக்குநர். இதில் ராஜன், தருஷி இருவரும் ஜோடி சேர்ந்துள்ளனர். படப்பிடிப்பின்போது நாயகன் ராஜனுக்கு காயம் ஏற்பட்டதாம். எனினும் அதைச் சிறிதும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடித்தாராம். படத்தில் சில புதுமுகங்கள் உள்ளன. அவர்கள் அனைவருமே தங்களது பங்களிப்பை கச்சிதமாக வழங்கியுள்ளதாக இயக்குநர் ரவி பாராட்டுகிறார்.
காயத்தைப் பொருட்படுத்தாமல் நடித்த 'செயல்' படத்தின் நாயகன்
1 mins read
-

