மருத்துவ மாணவியாக நடிக்கும் 'பிக்பாஸ்' புகழ் ஜூலி

மருத்துவ மாணவியாக நடிக்கும் 'பிக்பாஸ்' புகழ் ஜூலி

1 mins read
c2cc0b4f-80cc-4694-885f-4d53bfc774e7
-

தமிழகத்தில் நீட் தேர்வால் தனது மருத்துவக் கனவு கலைந்து போனது என்று கூறிய மாணவி அனிதா தனது உயிரை மாய்த்துக்கொண்டார். இது நீட் தேர்வுக்கு எதிராக தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அவரது வாழ்க் கையை மையமாக வைத்து ஒரு திரைப்படம் உருவாகிறது. அதற்கு 'டாக்டர் அனிதா எம்பிபிஎஸ்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் அனிதா வேடத்தில் 'பிக்பாஸ்' புகழ் ஜூலி நாயகியாக நடிக்க உள்ளார். இதற்கு சமூக வலைத்தளங்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் ஜூலி வருத்தத்தில் உள்ளாராம்.