அறிமுக இயக்குநர் ஜெகன் ராஜசேகர் இயக் கத்தில் நடிக்கிறார் ரஹ்மான். இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படம் திகில் கதையைக் கொண்டு உருவாக்கப்படுகிறது. சென்னை மாநகரில் ஒரே நாளில் நடக்கும் சில சம்பவங்களின் தொகுப்பாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளதாம். நடிகரும் ஒளிப்பதிவாள ருமான நட்டி எனும் நட்ராஜும் இதில் ஒப்பந்தமாகி உள்ளார். "பல உணர்வுபூர்வமான அம்சங்களைக் கொண்ட கதை இது. என்னுடையதும் நட்டி ஏற்கும் கதாபாத்திரமும் முற்றிலும் மாறுபட்டவை. கிட்டத்தட்ட சிங்கமும் ஆடும் கதையைப் போன்றது. "இருவரும் எங்களுடைய லட்சியங்களை அடைய எவ்வாறு போராடுகிறோம் என்பதை விறுவிறுப்பாக திரையில் காணலாம்.
ஏப்ரல் முதல் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அறிமுக இயக்குநர் என்றாலும் ஜெகன் ராஜசேகர் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. "ஒற்றை வரியில் கதை சொல்லி என்னை அசத்திவிட்டார். இந்தக் கதை வெகுவாக ஈர்த்ததால் தயக்கம் இன்றி நடிக்கிறேன். அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் ஏற்ற ஒரு படைப்பாகவே இது உருவாகும் என்ற உத்தரவாதத்தையும் இயக்குநர் அளித்துள்ளார்," என்று நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும் பேசுகிறார் ரஹ்மான்.

