அதிரடிப் படத்தில் நடிக்கும் அதர்வா

அதிரடிப் படத்தில் நடிக்கும் அதர்வா

1 mins read
8a0e514e-1a22-408d-a07c-c5e0ee9e9bd0
-

சத்தமில்லாமல் தனக்கேற்ற நல்ல கதைகளைத் தேர்வு செய்து, ஒவ்வொரு கட்டமாக முன்னேறி வருகிறார் அதர்வா. அடுத்து ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். '8 தோட்டாக்கள்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களைக் கவர்ந்தவர் ஸ்ரீகணேஷ். இதையடுத்து அதிரடி சண்டைக் காட்சிகள் இடம்பெறும் வகையில் திகில் கதை ஒன்றை உருவாக்கி உள்ளாராம். இதுகுறித்து அதர்வாவிடம் விவாதித்தபோது இந்தக் கதையில் தாமே நடிப்பதாக அவர் கூறினாராம். "எனது இயக்கத்தில் அதர்வா நடிப்பது உறுதியாகி உள்ளது. இப்படம் அவருக்கு ரசிகர்களிடம் நிச்சயம் நல்ல பெயரை வாங்கித் தரும்," என்கிறார் ஸ்ரீகணேஷ்.