தமிழ்த் திரையுலகுக்கு இது போதாத காலம் போலிருக்கிறது. வேலைநிறுத்தம் காரணமாக கோடம்பாக்கத்தில் இப் போது 30க்கும் மேற்பட்ட படங்களின் பணிகள் முடங்கி உள்ளன. ஒருபக்கம் தயாரிப்பாளர் சங்கத் தின் வேலைநிறுத்தம், மறுபக்கம் திரை யரங்க அதிபர்களின் போராட்டம் என இருமுனைத் தாக்குதலால் தாங்கள் விழிபிதுங்கி இருப்பதாக திரைப்படத் தொழிலாளர்கள் புலம்புகின்ற னர். ஜிஎஸ்டி வரி, கேளிக்கை வரி ஆகியவற்றால் பாதிக்கப் பட்டி ருப்ப தாக அதிருப்தி தெரி வித்து திரையுலகத்தி னர் சில மாதங்களுக்கு முன்பு போராட்டம் நடத்தினர். இ தை ய டு த் து அந்த வரிகள் ஓரளவு குறைக்கப்பட்டன.
தி ரை ப் ப ட த் தொ ழி லா ள ர் க ளி ன் வே லை நி று த் த ம் காரணமாக 13 நாட் கள் படப்பிடிப்பு பாதிக் கப்பட்டது. இச்சமயம் தொழி லாளர்கள் வருமானம் இன்றி கடும் சிரமங்களை எதிர் கொண்டனர். இந்நிலையில் புதுப்படங் களைத் திரையிட டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவனங்கள் அதிக கட்டணம் வசூலிப்பதாக தயாரிப்பாளர் சங்கம் அதிருப்திக் குரலை எழுப்பியது. அந்நிறுவனங்கள் சேவைக் கட்டணங்களை குறைக்க வலி யுறுத்தி, கடந்த 1ஆம் தேதி முதல் புதிய படங்களை வெளி யிடாமல் நிறுத்தி வைத்துள்ளது தயாரிப்பாளர் சங்கம்.
இதனால் இம்மாதம் திரைக்கு வரத் தயாராக இருந்த குறைந்த மற்றும் அதிக பொருட்செலவில் தயாரான இருபதுக்கும் மேற்பட்ட படங்கள் நிலைகுத்தி உள்ளன. இது போதாதென்று வரும் 16ஆம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகள் நடைபெறாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக விஜய், அஜீத், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் உட்பட பலரது படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏறத்தாழ 30க்கும் மேற் பட்ட படங்களின் படப்பிடிப்பு பாதிக்கப்பட் டுள்ளன.

