வாக்குவாதத்துக்குப் பின் 'யு' சான்றிதழ் பெற்ற 'இரும்புத்திரை'

வாக்குவாதத்துக்குப் பின் 'யு' சான்றிதழ் பெற்ற 'இரும்புத்திரை'

1 mins read
67e871cc-2e42-4b0b-a451-8cef38efee37
-

புதுப்படங்கள் எதுவும் வெளியாகாது எனத் தயாரிப்பாளர் சங்கம் அறிவித் துள்ள நிலையில், அதன் தலைவர் விஷால் நடித்த படமே வெளியீடு காண தயாராக உள்ளது. விஷால், சமந்தா ஜோடி சேர்ந்துள்ள படம் 'இரும்புத்திரை'. பி.எஸ்.மித்ரன் இயக்கி உள்ளார். இதில் நாயகனுக்கு இணையான கதாபாத்திரத்தில் நடித் துள்ளார் அர்ஜுன். அண்மையில் இப்படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை எழுப்பினராம். இணையம் வழி நடைபெறும் குற்றங்கள், மின்னணுப் பணப் பரிவர்த்தனை மூலம் நடைபெறும் முறைகேடுகள் ஆகியவை குறித்து இப்படத்தில் விலாவரியாக விவாதித் துள்ளனராம்.

படத்தில் இடம்பெறும் சில சம்பவங் கள் தொடர்பான ஆதாரங்களை தணிக்கை அதிகாரிகள் கேட்டுள் ளனர். தன்வசம் உள்ள ஆதாரங் களைக் காண்பித்தாராம் இயக்குநர் மித்ரன். எனினும் திருப்தி அடையாத அதி காரிகள் மேலும் பல சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். இதையடுத்து சுமார் இரண்டு மணி நேரம் அவருடன் தீவிர வாக்குவாதம் நடத்தி ஒரு வழியாக திருப்திபடுத்தி இருக்கிறார் மித்ரன். அதன் பிறகே படத்துக்கு 'யு' சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. 'இரும்புத்திரை'க்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய் துள்ளார். திரையுலகில் தற்போது நிலவும் போராட்டங்கள் முடிவுக்கு வரும் பட் சத்தில், எதிர்வரும் 29ஆம் தேதி இப் படம் வெளியாக வாய்ப்புள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன.

'இரும்புத்திரை' படத்தின் ஒரு காட்சியில் விஷால், சமந்தா.