இளைத்தார் அஞ்சலி

இளைத்தார் அஞ்சலி

1 mins read
7fb114e3-9538-4f5f-a535-dd9eb91f94cf
-

அஞ்சலியின் அண்மைய புகைப் படங்களைப் பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளனர். காரணம் இதுவரை சற்றே உடல் பெருத்துக் காணப்பட்டவர், தற்போது நன்றாக இளைத்து 'ஸ்லிம்'ஆக காட்சி தருகிறார். காதல் விவகாரம், சித்தி உடனான மோதல் என பல பிரச்சினைகளால் அஞ்சலிக்கு பட வாய்ப்புகள் குறைந்து போயின. போதாக் குறைக்கு உடல் எடையும் அதிகரித்ததால் கதாநாயகர்களும் அவரைப் புறக்கணிப்பதாக தகவல் வெளியானது.

இதையடுத்து உடல் இளைப்பது என முடிவு செய்தவர், கடந்த சில வாரங்களாக தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டாராம். அதற்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. தற்போது தனது புதிய தோற்றத்துடன் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சினிமா ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன. இனி தனக்குரிய வாய்ப்புகள் தானே தேடி வரும் என நம்புகிறாராம் அஞ்சலி. சில முன்னணி நாயகர்களின் பார்வையும் இவர் பக்கம் திரும்பி இருப்பதாகத் தகவல்.