'கிரிஷ்ணம்': உண்மை நிகழ்வுகளின் தொகுப்பு

1 mins read
f79d24b5-2962-433a-85f0-a64a4fecc227
-

"மனித உணர்வுகளையும் வாழ்வியலையும் கருவாகக் கொண்டு தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளில் உருவாகிறது இப்படம். ஐஸ்வர்யா உல்லாஸ், மமிதா பைஜு, சாய் குமார், ரெஞ்சி பணிக்கர், சாந்தி கிருஷ்ணா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்றுள்ளனர். ஹரி பிரசாத்தின் இசையில் உரு வாகியுள்ள பாடல்களை சந்தியா இயற்றியுள்ளார். "உண்மைக் கதை என்பதோடு மட்டுமல்லாமல், அதனுடன் நேரடியாக தொடர்புடைய நபரே கதாநாயகனாக நடிப்பது சிறப்பம்சம். படத்தின் ஒவ்வொரு காட்சியுமே ரசிகர்களை இருக் கையின் நுனிக்கு இட்டுச் செல்லும். எல்லாரையும் ஆச்சரியப் படுத்தும் என்பதிலும் சந்தேகம் இல்லை. "மேலும் தற்போது சினிமா உலகத்திற்கு பெரும் சவாலாக விளங்கும் இணையத் திருட்டிற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவிலேயே முதன்முறையாக நவீன தொழில்நுட்பத்தைப் பயன் படுத்தி உள்ளோம். இதன்மூலம் இணையத்தில் திருட்டுத்தனமாய் வெளியிடுவதை தடுக்கமுடியும்," என்கிறார் தினேஷ் பாபு.