"நடிக்க வருவதற்கு முன்னர் காதலிப்பது என்பது எளிது. ஆனால் சினிமாவுக்கு வந்து பெயர், புகழ் கிடைத்த பிறகு காதலிப்பது சிரமம். அதற்கு நேரம் கிடைக்காது. "காதலித்தால் அதற்கென்று நேரம் ஒதுக்க வேண்டும். காதலர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ள வேண்டும். சந்திக்கக் கூட நேரம் ஒதுக்காவிட்டால் காதலித்து என்ன பலன்?," என்று கேட்கிறார் காஜல். தற்போது தமக்கு காதலிக்க நேரம் இல்லை என்று குறிப்பிடுபவர், மனதளவில் திருமணத் துக்கும் தயாராக இல்லை என்கிறார். "இத்தனை காலம் நடிகையாக இருக்கும் எனது பயணத்தில் நிறைய நடிகர்கள் வந்து போய் இருக்கிறார்கள். அவர்களுடன் குறிப்பிட்ட ஓர் எல்லைக்குள்தான் எனது தொடர்பு இருந்தது. அந்த எல்லையை நான் கடந்ததே இல்லை. சினிமாவில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்படுகின்றன. ரசனையும் மாறுகிறது. அதற்கேற்ப என்னை நான் மாற்றிக்கொள்கிறேன்," என்கிறார் காஜல். தனக்கேற்ற புதுப் புது கதாபாத்திரங்களைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ள அவர், இதற்காக நிறைய திரைப்படங்களைப் பார்த்து வருவதாகக் கூறியுள்ளார்.
காஜல்: காதலிக்க நேரமில்லை
1 mins read
-

