ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகும் 'கரு'வில் ஒரு குழந்தைக்கு தாயாக நடிப்பதாகச் சொன்ன போது பலரும் தன்னைக் கிண்டல் செய்ததாக சாய் பல்லவி கூறியுள்ளார். எனினும் இத்தகைய கேலி கிண்டல்களை தான் சிறிதும் பொருட்படுத்தவில்லை என்றும் தெரிவித்துள்ளார். தமிழில் நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என்பதற்காக இதுநாள் வரை பொறுமை காத்ததாகக் குறிப்பிட்டுள்ள அவர், தனது காத்திருப்பு வீண் போகவில்லை என்கிறார்.
"மலையாளத்தில் 'பிரேமம்' படத்தில் நடிப்பதற்கு முன்பு அந்தக் கதை என்னைப் பாதித்தது. அது போல் தெலுங்கு 'பிடா' கதையும் என்னைக் கவர்ந்தது. அதனால் தான் தமிழிலும் அது போன்ற நல்ல கதையில் நடிக்க வேண்டும் என்று காத்திருந்தேன். "அப்போது இயக்குநர் விஜய் என்னைத் தொடர்பு கொண்ட போது நடிக்க மறுத்தேன். ஆனால் அவர் 'கரு' கதையை என் தாயிடம் சொல்ல, அவரது வற்புறுத்தலால் நானும் கதை கேட்டேன். "எனக்குள் பெரும் தாக்கத்தை அது ஏற்படுத்தியது. 'பிரேமம்' 'பிடா' படங்களைவிட 'கரு' எனக்கு தமிழில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தரும்," என்கிறார் சாய் பல்லவி.

