காரில் பயணம் செய்த போது தனக்கு பாலியல் தொல்லை நேர்ந்ததாக வெளியான தகவல் தவறானது என நடிகை பார்வதி நாயர் தெரிவித்துள்ளார். தாம் வாடகைக் காரில் சென்ற போது உடன் வந்த ஓட்டுநர் தனக்கு மரியாதை தரவில்லை என்றும், அநாகரிகமாகப் பேசினார் என்றும் அவர் கூறியுள்ளார். "ஓட்டுநர் தவறான பாதையில் சென்றதால் அவருடன் வாக்கு வாதம் ஏற்பட்டது. ஜிபிஎஸ் கருவி வேறு பாதையைக் காட்டியதால் தவறு நேர்ந்துவிட்டதாக அவர் பிறகு கூறினார். "மாறாக அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டதாகக் கூறப்படுவது பொய்யான தகவல். இனி இந்த வதந்தியை யாரும் நம்ப வேண்டாம்," என்று பார்வதி நாயர் விளக்கம் அளித்துள்ளார். மேற்குறிப்பிட்ட இந்தச் சம்பவம் சென்னையில் நடந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாலியல் தொல்லை: மறுக்கும் பார்வதி
1 mins read
-