திரிஷா நடிகையாவார் என தாம் எதிர்பார்க்க வில்லை என்கிறார் சிம்பு. இருவரும் சிறு வயது முதலே பேசிப் பழகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எதையும் வெளிப் படையாகப் பேசக் கூடியவர் சிம்பு. அண்மையில் தொலைக் காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், பல விஷயங்களைத் தயக்கமின்றி பகிர்ந்து கொண்டார். நிகழ்ச்சியினூடே 'விண்ணை தாண்டி வருவாயா' படம் குறித்து ஒரு ரசிகர் கேள்வி எழுப்பினார். அப்படத்தின் இரண்டாம் பாகத்தில் சிம்புவே மீண்டும் நாயகனாக நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மாதவன் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது குறித்து அந்த ரசிகருக்கு சிம்பு விளக்கம் அளித்தார்.
இதையடுத்து திரிஷா குறித்தும் ஒரு ரசிகர் பேச, உற்சாகமான சிம்பு, தனக்கும் திரிஷாவுக்கும் இடையே இருப்பது நட்போ காதலோ அல்ல என்றார். இருவருக்கும் இடையே இருப்பது ஓர் இனம்புரியாத அன்பு, ஆதரவு என்றும் அவர் தெரிவித்தார். "திரிஷாவை சிறு வயதில் இருந்தே எனக்கு நன்றாகத் தெரியும். எனினும் அவர் நடிக்க வருவார் என்பது தொடக்கத்தில் தெரியாது. ஒரு நாள் திடீரென கதாநாயாகியாக நடிப்பதாக தெரிவித்தார். "அவரிடம் எப்போதுமே பந்தா எதுவும் கிடையாது. எப்போதும் ஒரே மாதிரிதான் இருப்பார். திரிஷாவிடம் எது பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அதேபோல் அவரும் என்னுடன் எது குறித்தும் பேசுவதற்கான உரிமை இருக்கிறது," என்றார் சிம்பு.

