மாறன் இயக்கத்தில் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' படத்தில் நடித்து முடித்துள்ளார் அருள்நிதி. இது திகிலும் நிறைய திருப்பங்களும் கொண்ட விறுவிறுப்பான கதை என்கிறார். ராதா மோகன் இயக்கத்தில் நடித்த 'பிருந்தாவனம்' வசூல் ரீதியில் தோல்வி கண்டதால் அருள்நிதி துவண்டு விடவில்லை. மாறாக, விமர்சன ரீதியில் தனக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் கிடைத்த பாராட்டுகளைச் சுட்டிக் காட்டுகிறார். "தோல்விக்கான கார ணம் என்ன வென்று கேட்டீர்கள் எனில் என்னால் பதில் சொல்ல முடியாது. "'பிருந்தா வனம்' எதிர்பார்ப்பு களை ஏற்படுத்திய படம் தான்.
"ஆனால் ஏன் நல்ல வசூலைப் பெறவில்லை என் பது தெரிய வில்லை. "ஒரு படம் வெற்றி பெற்றால் யாரும் அதற்கான காரணங்களைத் தேடு வதில்லை. தோல்விக்கு மட்டும் ஏன் தேட வேண் டும்? "என்னைப் பொறுத்த வரை ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு என் திரையுலக வாழ்க்கையை எடை போட் டீர்கள் எனில், நான் நடித்துள்ள நல்ல படங்களின் பட்டியலில் நிச்சயமாக 'பிருந்தாவனம்' இடம்பெறும். "ஒருவேளை தவறான நேரத் தில் இப்படத்தை வெளியிட்டதும் தோல்விக்கு காரணமாக இருக்கலாம். ஒரு படத்தின் வெற்றியில் விளம்பரமும் முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்த வெள்ளிக்கிழமை இன்னின்ன படங்கள் வெளியாகின்றன என்பது சராசரி ரசிகனைச் சென்றடைய வேண்டும்," என்கிறார் அருள்நிதி.

