தமிழில் 'வெற்றிச்செல்வன்', 'டோனி', 'ஆல் இன் ஆல் அழகு ராஜா', 'கபாலி', 'உலா' ஆகிய படங்களில் நடித்திருப்பவர் இந்தி நடிகை ராதிகா ஆப்தே. இவர் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தமிழ்ப் பட நாயகனை ஓங்கி ஒரு பளார் விட்டதாகத் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, "தமிழில் ஒரு படத்தில் நான் நடித்தபோது, அந்தப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பிலேயே ஒரு நாயகன் என்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அவர் தமிழில் பெரிய நடிகர். இதற்கு முன் அவரை நான் நேரில் பார்த்தது கூட இல்லை. என் பாதங்களை அவர் வருடியதும் கோபத்தில் ஓங்கி அறைந்துவிட் டேன்," என்று கூறியுள்ளார்.
ராதிகா சொன்ன இந்த விஷயத்தால், ஐந்து தமிழ்ப் படங்களில் மட்டுமே நடித்துள்ள ராதிகா ஆப்தே, எந்த நாயகனை அறைந்தார் என்று தலையைப் பிய்த்துக் கொண்டுள்ளனர் ரசிகர்கள். ராதிகா ஆப்தே, நடிகை களுக்குத் தரப்படும் பாலியல் தொல்லைகள், சினிமாவில் நடிகைகளின் நிலை பற்றி துணிச்சலாக கருத்துகள் கூறி வருகிறார். அண்மையில் ஒரு 'டாக் ஷோ' நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராதிகா ஆப்தேவிடம் டோலிவுட்டில் ஓய்வுபெற வேண்டிய இயக்குநர் யார் என்று கேட்கப் பட்டபோது, சற்றும் யோசிக்காமல் அவர் ராம் கோபால் வர்மா என்று கூறியிருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் ராதிகா ஆப்தேவை அறிமுகம் செய்ததே ராம் கோபால் வர்மாதான். அவ ரையே ஓய்வு பெறச் சொல்லியிருக்கிறார். இந்தப் பதிலுக்கு என்ன சர்ச்சையைக் கிளப்பப்போகிறாரோ ராம் கோபால் வர்மா என கேள்விக்குறி எழுந்துள்ளது. இதே நிகழ்ச்சியில், தன்னிடம் தகாத முறையில் நடக்கமுயன்ற தென்னிந்திய நடிகர் ஒருவரை கன்னத்தில் அறைந்ததாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார் ராதிகா ஆப்தே.

