கடந்த 1985ல் பாண்டியராஜன் இயக்கத்தில் பிரபுவும் ரேவதியும் நடித்து பெரும் வெற்றி பெற்ற படம் 'கன்னி ராசி'. தற்போது இதே பெயரில் மற்றொரு புதிய படம் தயாராகிறது. இதில் விமலும் வரலட்சுமியும் ஜோடி சேர்ந்துள்ளனர். 'மன்னர் வகையறா' படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றியுள்ளதால் அதனால் ஏற்பட்டுள்ள பாராட்டுகளைத் தக்கவைத்துக்கொள்ள இந்தப் படத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் விமல். "ஒரு மாதம் இடைவெளி விட்டு நடித்தாலே ஒரு டஜன் நாயகன்கள் புதிதாக வந்து விடுகின்றனர். எனவே நமக்கான இடத்தைத் தக்கவைக்க கடுமையாகப் போராட வேண்டி உள்ளது,'' என் கிறார் விமல். விமலின் ஆசையைக் கன்னி ராசி நிறைவேற்றுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
விமலுக்கு கைகொடுக்குமா கன்னி ராசி
1 mins read
-

