நடிகைகளுக்கு பாலியல் தொல்லை பற்றி இலியானா

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை பற்றி இலியானா

1 mins read
2d437b22-8330-47e1-ad5c-2a6df7c0fe2d
-

'நண்பன்' படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்றவர் நடிகை இலியானா. 'கேடி' படத் திலும் நடித்துள்ளார். இந்தியில் முன்னணி கதாநாயகியாக இருக் கிறார். தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். பாலியல் தொல்லையால் பாதிக் கப்படும் பெண்களுக்காக சமூக வலைத்தளம் தொடங்கப்பட்டு உள்ளது. அதில் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பலரும் தகவல்களைப் பகிர்ந்துவருகின்றனர். "சினிமாவில் நடிகைகளுக்குப் பாலியல் தொல்லைகள் இருப்பது உண்மைதான். வாய்ப்பு வேண்டு மெனில் பாலியல் தொல்லைக்கும் தயாராகவே இருக்கவேண்டும்," என்று கூறப்படுகிறது.

"பட வாய்ப்புகளுக்காக தங்க ளுக்கு நேரும் பாலியல் தொல் லைகள் குறித்து நடிகைகள் வெளியே சொன்னால் அவர்கள் சினிமா வாழ்க்கையே முடிந்து விடும். இது கோழைத்தனமாகத் தெரிந்தாலும் அதுதான் உண்மை. "சில ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்த இளம் நடிகையை ஒரு பெரிய தயாரிப்பாளர் தொந்தரவு செய்துள்ளார். அவரை எப்படி சமாளிப்பது என்று அந்த நடிகை என்னிடம் ஆலோசனை கேட்டார். "நீங்கள் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை நான் சொல்லக்கூடாது. ஒருவருக்காக இன்னொருவர் முடிவுகள் எடுக்க முடியாது. எனது முடிவை அந்தப் பெண் மீது திணிக்கமுடியாது. தயாரிப்பாளர் ஆசைக்கு இணங்கு வதா? இல்லையா? என்பதை அந்த இளம் நடிகைதான் முடிவு செய்யவேண்டும். "செக்ஸ் தொல்லைகளைத் துணிச்சலாக வெளியே சொல் வதன் மூலம்தான் இதைத் தடுக்க முடியும்," என்றார் இலியானா.