'என்னை அடையாளம் தெரியவில்லை'

'என்னை அடையாளம் தெரியவில்லை'

1 mins read
65a03e33-8eb8-4a70-b6fa-30df8529a321
-

கிடைத்த வாய்ப்புகளில் நடிக்காமல் நல்ல கதைகளுக்காக காத்திருந்த தற்குக் கிடைத்த பலன்தான் 'ஆண் தேவதை' என்று கூறியுள் ளார் 'ஜோக்கர்' படத்தின் நாயகி ரம்யா பாண்டியன். தமிழக ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்திருந்த பேட்டியில், "மல்லிகா கதாபாத்திரம் எனக்கு பெரிய பொறுப்பை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. "அந்தப் பெயரை அடுத்த படத்திலேயே இழந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன். எனவே நல்ல கதைக்காக காத் திருந்தேன்.

"'ஆண் தேவதை' படத்திற் கான கதை கேட்கும்போதும் வித் தியாசமாக இருந்தது. சவாலான கதாபத்திரம் என்று மனம் சொன் னது. உடனே ஏற்றுக் கொண்டேன். "கணவன், மனைவி என இருவரும் வேலைக்குச் செல்பவர் களின் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் என்ன, அந்தக் குழந்தைகளுக்கு என்ன தேவை, அவர்களது வயதான பெற்றோர் களின் நிலை ஆகியவற்றைப் பேசும் படம்தான் 'ஆண் தேவதை'.