லிவிங்ஸ்டன் மகளுடன் இணைந்த முன்னாள் நாயகியின் மகன்

லிவிங்ஸ்டன் மகளுடன் இணைந்த முன்னாள் நாயகியின் மகன்

1 mins read
a86d5809-ba1b-4085-94b8-10ecb8ce7514
-

நடிகை அம்பிகாவின் மகன் திரைத்துறை யில் காலடி பதித்துள்ளார். அம்பிகாவின் மகன் ராம் கேசவ், 'கலாசல்' படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அவரது காதலியாக ஜோவிதா நடிக்கிறார். இவர் நாயகன், வில்லன் வேடங்களில் நடித்த லிவிங்ஸ்டனின் மகள். இதுபற்றி 'கலாசல்' பட இயக்குநர் அஸ்வின் மாதவன் கூறும்போது, "வர்த்தக ரீதியில் எடுக்கப்பட்டுள்ள காதல் கதை. புதுமுகங்கள் ஜோடி சேர்ந்தால் பொருத்தமாக இருக்கும் என்று எண்ணியபோது ராம் கேசவ், ஜோவிதா பொருத்தமாக அமைந்தனர். "பிரபலங்களின் மகன், மகளை வைத்து முதல் படம் இயக்குவது மகிழ்ச்சி. சில விஷயங்கள் கார்ப்பரேட் நிறுவ னங்களால் அப்பாவி மக்கள் மீது எப்படி திணிக்கப்படுகிறது என் பதே படத்தின் கதைக்கரு. "பி.சி.பாலு தயாரிக்கிறார். பாபுகுமார் ஒளிப்பதிவு. நிஜா முதீன் இசை. படத்தில் ராதாரவி, அம்பிகா, முருகதாஸ், மதன்பாப், அபிஷேக், பானுசந்தர், சாய்பிரியா முக்கிய வேடங்களில் நடிக்கின் றனர்," என்றார்.

'கலாசல்' படப்படிப்பில் ராம் கேசவ், ஜோவிதா.