தன் தங்கையின் திருமணம் முடிந்துவிட்ட பின்னரும்கூட, காஜல் தனது திருமணத்தைப் பற்றி யோசிக்காதது அவரது குடும்பத்தினருக்கு ஏமாற்றத்தை அளித்து உள்ளது. முன்னணி நாயகர்களுடன் வலம் வந்த காஜலுக்கு ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் குறையத் தொடங்கின. இதையடுத்து அவருக்குத் திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத் தினர் முடிவு செய்தனர். அவரும் அதற்குச் சம்மதித்தார். அந்நேரம் பார்த்து மீண்டும் விஜய், அஜித், சிரஞ்சீவி என முன்னணி நடிகர்களுடன் நடிக்க காஜலுக்கு மீண்டும் அழைப்பு வரவே, அதை ஏற்றார். அப்படங்கள் வரவேற்பு பெற் றதாலும் மீண்டும் வாய்ப்புகள் குவியத் தொடங்கியதாலும் காஜல் திருமணத்திற்கு மறுத்துவிட்டார்.
ஆனால், தற்போது தமிழில் 'பாரிஸ் பாரிஸ்' தெலுங்கில் 'எம்எல்ஏ' என 2 படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். எனவே இப்போதாவது அவருக்கு திரு மணம் செய்துவிட வேண்டும் என அவ ரது குடும்பத்தினர் விரும்புகின்றனர். காஜலோ இந்தப் படங்களுக்குப் பிறகு மேலும் வாய்ப்புகள் தேடி வரும் என எதிர்பார்க்கிறார். ஆனா லும் இந்த ஆண்டு எப்படியாவது காஜலுக்குத் திருமணம் செய்து விட வேண்டும் என நினைக்கும் பெற்றோர் அவரது சம்மதத்திற் காக காத்திருக்கின்றனர்.

