சிரித்தபடி நடித்து முடித்த அதிதி

சிரித்தபடி நடித்து முடித்த அதிதி

1 mins read
ffc6d544-a68c-478a-a0ca-1fd11415c82f
-

'களவாணி மாப்பிள்ளை' படத்தில் தினேஷ் ஜோடியாக நடித்து வருகிறார் அதிதி மேனன். இந்தப் படம் காதலை மையப்படுத்தி உருவாகி வருவதாகக் கூறப்பட்ட நிலையில், காதல் காட்சிகளை விட நகைச்சுவைக் காட்சிகள் அசத்தலாக இருக்கும் என்கிறார் அதிதி. ஏனெனில் நகைச்சுவைக் காட்சிகளில் அவ்வளவு ஈடுபாட்டுடனும் கலகலப்பாகவும் நடித்து இருக்கிறாராம். "நீங்கள் கேள்விப்பட்டது போல் இதில் காதல், நகைச்சுவை இரண்டும் உண்டு. கிராமம், நகரம் என இரண்டு கதைக்களங்கள் உள்ளன.

"முதல் முறையாக நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்கிறேன். அதனால் ஒவ்வொரு காட்சியையும் நன்றாக உள்வாங்கி, ரசித்து நடிக்கிறேன். இப்படம் நிச்சயம் ரசிகர்களைக் கவரும்," என்கிறார் அதிதி. 'களவாணி மாப்பிள்ளை' படத்தில் மொட்டை ராஜேந்திரன், ஆனந்த்ராஜ், தேவயானி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.