நடிகைகள் மத்தியில் போட்டி நிலவுவதாக மட்டுமே எப்போதும் செய்தி வெளியாகிறது. உண்மையில் இன்றைய இளம் நாயகிகள் ஒருவருக்கொருவர் நன்றாக நட்பு பாராட்டி வருகிறார்கள் என்பதே உண்மை. அப்படிப்பட்ட சில நட்புக் கூட்டணிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
நடிகைகள் பிரியா ஆனந்தும், 'கண்ணா லட்டு தின்ன ஆசையா' விசாகா சிங்கும் மிக நெருங்கிய கூட்டாளிகள். இருவரும் தினமும் 'வாட்ஸ் அப்' மூலம் தொடர்புகொண்டு பல விஷயங்களைப் பரிமாறிக்கொள்கிறார்கள். வாய்ப்பு இருந்தால் வாரத்துக்கு ஒருமுறை யாவது நேரில் சந்தித்துக் கொள்வார்களாம். ஒரு படத்தில் ஒப்பந்தமாகும்போது, அதில் வேறொரு நல்ல கதாபாத்திரம் இருந்தால், தன் தோழிக்கு வாய்ப்பு தருமாறு இருவருமே சிபாரிசு செய்யத் தவறுவதில்லை.
நடிகைகள் ஓவியா, வேதிகா இருவரும் அண்மையில் தான் ஒருவருக்கொருவர் அறிமு கமாகினர். ஆனால் குறுகிய காலத்திலேயே நெருங்கிய தோழிகளாகிவிட்டனர். தற்போது ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 3' படத்தில் ஓவியாவுடன் சேர்ந்து நடிக்கிறார் வேதிகா.
அண்மையில் ஒரு நாள் அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார் ஓவியா. அன்றைய தினம் வேதிகாவுக்கு பிறந்தநாள். அவரே அதுபற்றி அலட்டிக்கொள்ளாத நிலை யில், மிகப்பெரிய கேக் ஒன்றை படப்பிடிப்புத் தளத்துக்கு வரவழைத்துள்ளார் ஓவியா. படக்குழுவினர் முன்பு கேக் வெட்டி உற்சாகத்துடன் பிறந்த நாளைக் கொண் டாடிய வேதிகா, 'அன்பு என்றால் அது ஓவியா தான்' என்று பார்ப்பவர்களிடம் நெகிழ்கிறாராம்.
"திரையுலகில் உங்களுக்குப் பிடித்தமான தோழி யார்?" என்று கேட்டால், சற்றும் யோசிக்காமல் ஐஸ்வர்யா ராஜேஷ் என்கிறார் ஓவியா. (வேதிகாவுக்கும் முன்பே ஐஸ்வர்யா இவரது நட்பு வட்டத்தில் வந்து விட்டாராம்!)
"ஹலோ நான் பேய் பேசு றேன்' படத்தில் நடிக்கத் துவங்கியது முதலே இருவ ரும் உடன்பிறவா சகோதரி கள் ஆகிவிட்டார்களாம். நடிகைகள் ஷாலினி பாண்டே 'நடிகையர் திலகம்' படத்தில் கீர்த்தி சுரேஷின் தோழியாக நடித்துள்ளார். இருவரும் இப்போது நல்ல தோழிகளாக வலம் வருகின்றனர். இதேபோல் மேலும் பல இளம் நாயகிகள் நட்பு பாராட்டி வரு கின்றனர்.

