கார்த்தி முன்வைக்கும் வேண்டுகோள்

கார்த்தி முன்வைக்கும் வேண்டுகோள்

1 mins read
42281a20-38d0-4d3a-af0d-9cfe481db64a
-

நேர்மையான காவல்துறை அதிகாரியாக நடிப்பதே மிகச் சிரமமான விஷயம் என்றால், நேர்மையாக இருப்பது எவ்வளவு கடினம் என்பது 'தீரன்' படத்தில் நடிக்கும் போது தமக்குத் தெரிய வந்ததாக நடிகர் கார்த்தி கூறியுள்ளார். இரவு பகல் பார்க்காமல் உழைக்கும் காவல்துறையினருக்குப் பொதுமக்கள் உரிய மரி யாதை அளிக்கவேண்டும் என முன்னாள் காவல்துறை அதிகாரிகள் பொதுநல அறக்கட்டளை தொடக்க விழாவில் பேசியபோது அவர் கேட்டுக்கொண்டார்.

"போலிசாரின் மன உளைச்சலைப் போக்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். பணியில் உள்ள காவலர்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் சம்பவங்கள் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்துகிறது. "பணியில் உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்கள் பாதிக்கப் படுவதைப் பார்க்கும்போதுதான், அறக்கட்டளை தொடங்கவேண்டும் என்று தோன்றியது. "நேர்மையாக உழைத்ததற்கு இந்த சமூகம் என்ன செய்தது என்று பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு எந்தவொரு தருணத்திலும் தோன்றி விடக்கூடாது," என்றார் கார்த்தி. அறக்கட்டளைக்காக தங்கள் குடும்பம் சார்பில் ரூ.10 லட்சம் நன்கொடையாக வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.