தனது கதாபாத்திரத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் உள்ளது என்பதை அறிந்து கொண்ட பிறகே ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொள்வதாகச் சொல்கிறார் வரலட்சுமி. தன் தந்தை சரத் குமாருடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பதால்தான் 'பாம்பன்' பட வாய்ப்பை ஏற்றுக்கொண்டாராம். முதன் முறையாக தந்தையுடன் நடிப்பது மிகுந்த உற்சாகம் அளித்துள்ளதாம். "ஆர்யா என்னுடைய நல்ல நண்பர்களில் ஒருவர்.
அதனால்தான் 'எங்க வீட்டு மாப்பிள்ளை' நிகழ்ச்சியில் அவருடன் கலந்துகொண்டேன். "நான் இயக்குநர்கள் சொல்வதை கேட்டு அப்படியே நடிப்பதால் இதுவரை யாருடனும் பிரச்சினை வந்தது இல்லை. பட வாய்ப்புக்காக பாலியல் உறவு கொள்ள அழைக்கும் பழக்கம் இன்னும் உள்ளது என்று நினைக்கிறேன். அந்தப் பழக்கத்தை ஒழிக்கவேண்டும். இந்த மாதிரியான தொல்லைகள்தான் நடிகைகளுக்குப் பெரிய சவாலாக உள்ளது," என்கிறார் வரலட்சுமி.

