அனுஷ்கா: கற்பனை செய்ய பிடிக்கும்

அனுஷ்கா: கற்பனை செய்ய பிடிக்கும்

1 mins read
bb3e0dd3-ecde-439e-888c-09e600c93013
-

யாருக்கும் தம்மால் எந்தவித கஷ்டமும் நேர்ந்துவிடக்காது என்பதில் மிகுந்த கவனத்துடன் இருப்பதாகச் சொல்கிறார் அனுஷ்கா.

கடமையைச் செய், பலனை எதிர்பார்க்காதே என்பதுதான் தனது சித்தாந்தம் என்று சொல்பவர், தோல்விகளைக் கண்டு கவலைப்படுவதே இல்லை என்கிறார்.>p> கடந்த சில ஆண்டுகளாகவே கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாகத் தேர்வு செய்து நடித்து வருகிறார் அனுஷ்கா. அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகின்றன.

'ஓம் நமோ வெங்கடேசாய', 'பாகுபலி', 'பாகமதி' உள்ளிட்ட படங்கள் வருங்காலத்திலும் அனுஷ்காவின் பெயரையும் திறமையையும் பறைசாற்றும் படைப்புகளாக விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என மும்மொழிகளில் தயாராகும் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். "இந்த ஆண்டு எனக்கு மேலும் சிறப்பாக அமையும் என நம்புகிறேன். நல்ல கதைகளில் நடிக்கக்கூடிய வகை யில் புது வாய்ப்புகள் தேடி வருகின்றன. சிறு வயதில் புராண, சரித்திர கதைகள் கொண்ட புத்தகங்களை வாங்கிப் படிப்பேன்.

"கற்பனைக் கதைகளையும் படிப்ப துண்டு. என்னையும் அந்தக் கதையில் ஒரு கதாபாத்திரமாக நினைத்துக் கொண்டு கற்பனை உலகத்தில் வாழ் வேன். அதில் இருந்து மீண்டு நிஜ உலகத்துக்கு வர பிடிக்காது. அது இனிமையான அனுபவமாக அமையும்.