நடிகை ஸ்ரேயாவின் திருமணம் அவசர கதியில் நடந்ததற்கான காரணம் தற்போது தெரிய வந்துள்ளது. மார்ச் 16 முதல் 18ஆம் தேதி வரை மூன்று நாட்களுக்கு ஸ்ரேயாவின் திருமணம் நடைபெறும் என முன்பு தகவல் வெளியானது. ஆனால் திடீரென கடந்த 12ஆம் தேதியே தனது ரஷ்ய காதலரை மணந்தார் ஸ்ரேயா.
இந்தத் திருமணத்தில் அவரது தாயாருக்கு அறவே விருப்பம் இல்லையாம். இதனால் திருமணத்தின் போது பிரச்சினை ஏற்படும் என்று ஸ்ரேயா அஞ்சினாராம். எனவேதான் ஸ்ரேயா, ஆண்ட்ரே கோசிவ் திருமணம் அவசரமாகவும் ரகசியமாகவும் நடந்திருப்பதாகத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

