இளையர்களுக்கு கங்கனா அறிவுரை

இளையர்களுக்கு கங்கனா அறிவுரை

1 mins read
3bdde6d3-dbbd-4f35-a00c-232d2711503a
-

நாட்டைப் பற்றி குறை கூறும் இளையர்கள், நாட்டின் முன்னேற்றத்துக்கு தங்களது பங்களிப்பை வழங்க வேண்டும் என்று நடிகை கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார். அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், நாட்டைப் பற்றி குறை சொல்வது தற்போது ஒரு வழக்கமாகிவிட்டது என்றார். பிரதமர் மோடியின் தீவிர ரசிகையாம் கங்கனா. இந்தியப் பெண்களுக்கு அவர் தான் முன்மாதிரி என்றும் சொல்கிறார்.

"தேநீர் விற்றவர் பிரதமர் ஆகி உள்ளார் என்றால் அது அவருடைய வெற்றி மட்டுமல்ல, ஜனநாயகத்தின் வெற்றி. பிரதமர் மோடிதான் இந்தியப் பெண்களுக்கு சரியான முன்மாதிரி. "பாகிஸ்தான் கலைஞர்கள் இந்தியப் படங்களில் நடிக்கக் கூடாது என்று சொல்வது சரியல்ல. தேசிய கீதத்தைக் கேட்டால் அமெரிக்கர்கள் எழுந்து நிற்கிறார்கள். நாம் ஏன் நமது தேசிய கீதத்துக்கு எழுந்து நிற்க வெட்கப்பட வேண்டும்? "இந்தியாவில் உள் கட்டமைப்பு சரியில்லை, அசுத்தமாக இருக்கிறது என்றெல்லாம் இளையர்கள் குறை சொல்கிறார்கள். ஏன் அவர்களே சுத்தம் செய்யக் கூடாது?," என்று கேள்வி எழுப்புகிறார் கங்கனா ரணாவத்.