எனக்கு அதிக எதிர்பார்ப்புகள் கிடையாது: இலியானா

எனக்கு அதிக எதிர்பார்ப்புகள் கிடையாது: இலியானா

2 mins read
e8925c33-3c7e-4549-bf13-e1809cfcff0f
-

"எனக்கு சினிமாவில் எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் இல்லை. கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்படித்தான் நான் இருக்க வேண்டும், இப்படித்தான் செயல்பட வேண்டும் என்று எந்தவிதமான திட்டங்களையும் வகுக்கவில்லை என்கிறார் இலியானா. "என்னைப் பொறுத்தவரை எதிர்பார்ப்புகள் இருந்தால் தான் ஏமாற்றங்களும் ஏற்படும். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்று மட்டுமே சிந்திக்கிறேன். நல்ல கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறேன்.

"எனக்கு வரும் பட வாய்ப்புகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதில்லை. சில படங்களில் கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி என்னை மாற்றிக்கொள்ள தயாரா? என்று கேட்கிறார்கள். அத்தகைய தருணங்­களில் அதிகமாக யோசித்து முடிவை எடுக்கிறேன். "மற்றவர்களைவிட நமக்கு நல்ல கதாபாத்திரங்களும் கதை களும் கிடைக்க வேண்டும் என்றுதான் எல்லோருமே விரும்புகிறார்கள்.

"எல்லோருக்கும் அத்த கைய எதிர்பார்ப்புகள் நிறை வேறுவதில்லை. "என்னைப் பொறுத் தவரை இனிமேலும் எத் தகைய எதிர்பார்ப்பு களும் இன்றித்தான் செயல்படுவேன். "ஒருவேளை நான் அதிக ஆசைகளைக் கொண்டிருந்தாலோ, அதிகம் எதிர் பார்த்து இருந்தாலோ மனதளவில் பெரும் ஏமாற்றங்களை எதிர் கொண்டு இருப்பேன். "நல்ல வேளையாக எனக்கு அப்படிப்பட்ட நிலை ஏற்பட வில்லை. இனிமேலும் ஏற் படாது என உறுதியாக நம் புகிறேன். "எனக்கும் கூட சில மனப் போராட்டங்கள் இருந்தன. அவற்றில் இருந்து தற்போது மீண்டு வருகிறேன். "நடிப்பில் இருந்து கொஞ்சம் ஓய்வு எடுப்பது நன்றாக இருக்கிறது. எனது ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த முடிகிறது. "எனது பயணம் இதே போல் அமைதியான வழியில் தொடர வேண்டும் என விரும் புகிறேன்," என்று தெளிவாகப் பேசுகிறார் இலியானா.