தான்தோன்றித் தனமாக நடந்துகொள்ளும் இளைஞனின் கதை

1 mins read
ccd8a6f1-e13e-4ad0-a686-d3e44b5bf442
-

குறும்படங்களை இயக்கி வந்த சந்தோஷ் தியாகராஜன் தற்போது இயக்கும் புதிய திரைப்படம் 'சீமத்துரை'. 'கதை கேளு' படத்தில் நடித்த கீதன்தான் கதாநாயகன். இவருக்கு ஜோடியாக நடிப்பவர் வர்ஷா பொல்லம்மா. "யார் பேச்சையும் மதிக்காமல் தான்தோன்றித்தனமாகச் செயல்படும் இளைஞன் சீமத்துரை. ஒரு சம்பவம் அவனது வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது? சீமத்துரையின் போக்கில் மாற்றம் ஏற்படுகிறதா? என்பதே கதை. இதை மிக யதார்த்தமாகச் சொல்லி இருக்கிறோம்," என்கிறார் இயக்குநர்.