'கதாநாயகியாக நீடிப்பேன்'

'கதாநாயகியாக நீடிப்பேன்'

2 mins read
09e77e2e-298a-4374-ac93-e59976afe1ff
-

ஒரே மாதிரியான படங்களில் நடித்ததால் போரடித்துப் போனது என்றும், அதனால் தான் இடையில் சில காலம் நடிக்கவில்லை என்றும் கூறுகிறார் சுனு லட்சுமி. 'அறம்' படத்தில் இரு குழந்தைகளுக்கு தாயாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த இவருக்கு, தற்போது நல்ல வாய்ப்புகள் கிடைத்து வருகிறதாம். இரு குழந்தைகளுக்கு தாயாக நடிப்பதற்கு கொஞ்சம் கூட தயங்கவில்லை என்கிறார் சுனு. காரணம் அறம் படத்தின் கதை அந்தளவு அவரது மனதை பாதித் ததாம்.

"கடந்த 2009ஆம் ஆண்டே நடிக்க வந்துவிட்டேன். தொடக்கத்தில் மளமள வென நிறைய படங்களை ஒப்புக் கொண் டேன். அவற்றில் சில படங்கள் இப்போது தான் வெளியாகின்றன. "ஆனால் ஒரே மாதிரி நடித்தது ஒரு கட்டத்தில் போரடித்து விட்டது. அதனால் நல்ல கதைகளாகத் தேர்வு செய்து நடிக்கத் தொடங்கி இருக்கிறேன். ஆண்டுக்கு ஒரே ஒரு படம் நடித்தால் கூடப் போதும். ஆனால் அந்த ஆண்டு முழுவதும் ரசிகர் கள் என்னை நினைவில் வைத்திருக்கும் படமாக அது இருக்க வேண்டும்," என்று எதிர்பார்ப்புகளுடன் சொல்கிறார் சுனு லட்சுமி.

தற்போது 'உதயம் என்.ஹெச்.4', 'புகழ்' உள்ளிட்ட படங்களை இயக்கிய மணிமாறனின் 'சங்கத் தலைவன்' படத்தில் ஒப்பந்தமாகி உள்ளாராம். இதில் சமுத்திரக்கனி நாயகனாக நடிக்க, சுனுவும், விஜய் தொலைக்காட்சி புகழ் ரம்யாவும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். இயக்குநர் வெற்றிமாறன் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

கேரளாவைச் சேர்ந்தவர் என்றாலும், இதுவரை ஒரேயொரு மலையாளப் படத்தில் தான் நடித்திருக்கிறார் சுனு லட்சுமி. மலையாளத்தில் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்பது ஒரு காரணம் என்றால், தமிழில் நடிப்பதுதான் இவருக்கு ரொம்ப பிடிக்குமாம். "ஒரு படத்தில் நடித்து முடிப்பதற்குள் அடுத்த படத்தில் வாய்ப்புக் கிடைப்பது கோடம்பாக்கத்தில்தான் சாத்தியம்," என்று சிரிக்கிறார் சுனு.