நடிகையர் திலகம் குறித்து தினந்தோறும் புதுப்புது தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. காலஞ்சென்ற நடிகை சாவித்திரியின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் மறைந்த நடிகர் சிவாஜியின் கதாபாத்திரத்தில் அவரது பேரனான விக்ரம் பிரபு நடிக்கிறாராம். இதில் சாவித்திரி வேடத்தில் கீர்த்தி சுரேஷும், ஜெமினி கணேசனாக துல்கர்சல்மானும் நடிக்கின்றனர். பழம்பெரும் நடிகை பானுமதி வேடத்தில் அனுஷ்காவும், நாகேஸ்வர ராவ் கதாபாத்திரத்தில் நாகசைதன்யாவும், எஸ்.வி.ரங்காராவ் வேடத்தில் மோகன்பாபுவும் ஒப்பந்தமாகி உள்ளனர். இந்நிலையில் சிவாஜி கணேசனாக யாரை நடிக்க வைப்பது என்று யோசித்த படக்குழுவினர், கடைசியில் விக்ரம் பிரபுவை தேர்வு செய்தனர். தன் தாத்தாவின் கதாபாத்திரத்தில் நடிக்க விக்ரம் பிரபுவும் உடனே ஒப்புக் கொண்டாராம்.
சிவாஜி பாத்திரத்தில் பேரன் விக்ரம் பிரபு
1 mins read
-

