பின்தொடரும் பத்து லட்சம் பேர்

பின்தொடரும் பத்து லட்சம் பேர்

1 mins read
74bc3fd6-ca20-47e3-a98b-cceb74f212cf
-

'துருவ நட்சத்திரம்', 'இது வேதாளம் சொல்லும் கதை', 'வட சென்னை', 'லட்சுமி', 'செக்கச் சிவந்த வானம்' என ஒரே சமயத்தில் அரை டஜன் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். தன்னைப் பற்றிய பல்வேறு தகவல்களை, தனது புகைப்படங்களை சமூக வலைத்தளப் பக்கங்களில் தவறாமல் வெளியிட்டு வருகிறார். இதையடுத்து ஐஸ்வர்யாவை சமூக வலைத்தளங்கள் மூலம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. தற்போது டுவிட்டரில் மட்டும் இவரை 10 லட்சம் பேர் பின்தொடர்கிறார்களாம். இதனால் ரசிகர்களின் அன்பை நினைத்து நெகிழ்ந்து போயிருப்பதாகச் சொல்கிறார் ஐஸ்வர்யா. தன்னைப் பின்தொடர்பவர்களுக்கு நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார்.